வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, July 2, 2011

காதலின் ஆரம்பமே

விடை கொடு என் உயிரே
நான் போய் வருகிறேன் !
வரும் ஜென்மத்திலாவது
ஒன்றாக வாழலாம்
கணவன் மனைவியாகவே!

கண்ணிர் சிந்தாதே
என் ஆருயிரே
என் நினைவும் காதலும்
உன்னிடம்தான் உள்ளது.

நான் இல்லாத இந்த வாழ்க்கயை
நம் காதலுடன் வாழ்
நீ வாழ்ந்த வாழ்க்கயை
கேட்க மீண்டும் பிறந்து வரும்
என்னிடம் சொல்வாயா
ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கண்ணே என் கண்மணியே
கண்ணீர் சிந்தாதே
நான் உன்னை விட்டு செல்லவில்லையடி
உனக்குள் உன் உயிராய்
கலந்துவிட்டேனடி
சற்று புண்ணகை செய் என் காதலியே
ஆசையுடன் விடைபெறுவேன் .

உன் கைகளை பிடிக்க ஆசைப்பட்டேன்
அதற்குமுன் என் கைகளை
பிடித்துவிட்டான் எமன்!
யார்மீது குத்தம் சொல்ல!
உன் மீதா! என் மீதா! இல்லை எமன் மீதா!

உன் உயராய் கலந்து விட்ட
என்னை மறந்துவிடாதே!
உன்னுடன் ஒரு நாள், ஒரு நிமிடம்
வாழ கொடுத்துவைக்கவில்லை நான்.

கவலைகள் வேண்டாம்
வேதனைகளும் துயரங்களும்
காதலில் தோற்றவர்களுக்குத்தான்
நமக்கல்ல .
உண்ணர்வையும் உயிரையும்
புரிந்துகொண்ட நம்மிருவருக்கு
இந்த காதல் பிரிவில்லை
காதலின் ஆரம்பமே!

பத்தாம் நாள்!

முதல் முறை
வெட்கத்தில் தலைகுனிந்தேன்
அவனை கண்ட
முதல் நாள்!

கண்கள்,

நீரின்றி தவிக்கும்
மீன்கள் போல துடித்தது
அவன் கண்கள் காணாத
இரண்டாம் நாள்!

வெகு தூரம் ஓடிய

கால்கள் போல் துவண்டது இதையம்
காதல் வலியால்
மூன்றாம் நாள்!

உதடுகள் ,

ரோஜா இதழை போல் வாடியது
அவனுடன் பேச ஏங்கிய
நான்காம் நாள்!

மல்லிகை போல்

முகம் புன்னகையால் பூத்தது
அவன் பேசின "காதலால்"
ஐந்தாம் நாள்!

இரவு,

உறக்கம் பிடித்தது
அவனால் கண்ட கனவு
ஆறாம் நாள்!

தேகம் சிலிர்த்தது

அவனுடன் இருந்த
சில நிமிடம்
ஏழாம் நாள்!

உலகம் புதிதானது

அவன் உதடு தீண்டிய
என் உதடுகளால்
எட்டாம் நாள்!

வாழ்கையை வாழ்ந்த அர்த்தம்
புரியவில்லை
அவனுடன் ஓடிச்சென்ற
ஒன்பதாம் நாள்!

என் பெண்மையை

உணர்ந்தேன்
அவன் சுண்டு விரல் தீண்டி
என் தேகம் விற்ற
பத்தாம் நாள்!
அப்போதுதான் தெரிந்தது
அவனுக்குள் இருந்தது
வெறும் காமம் என்று!

மனித நேயம்

விதி செய்த பாவம் 
எங்களை ஈழமாக பிறக்கவைத்தது
எங்கள் தேகத்தில்  
கூர்முனை வாள் கொண்டு பிளந்தால் 
பீறிற்று வருவது குருதி தானே
தண்ணீர் அல்லவே.

துயில் கொண்டவரை 
தட்டி எழுப்பினால் கலைந்துசெல்லும்  
கனவுகள் எங்களுக்கும் தான்.
நாங்கள் மனிதர்கள்
மிருகம் அல்ல.

தாகமெடுத்தால் பருகுவது 
தண்ணீரை தான் 
சாக்கடை அல்ல.
எங்களுக்கும் இருப்பது 
சிறு இதையம் தான் 
பாறை அல்ல.

நாங்கள் செய்த பாவம் 
ஈழமாக பிறந்தது தானே 
மனிதராக பிறந்தது அல்லவே.
எங்களையும் வாழவிடுங்கள் 
நாங்களும் உயர்திணை தான் 
றிணை அல்ல 
ஏனென்றால் எங்களுக்கும் உண்டு 
"மனித நேயம்"