வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, May 14, 2011

தனிமை



மௌனமாய் 
உணர்வுகளுடன் இதயம் 
பேசிக்கொள்ளும் அழகான நேரம்,
என் பிறப்பால் கிடைத்த 
பெருஞ்சொத்து
தனிமை!


குப்பைத் தொட்டிக்கு

பரிசாய் ஈன்றவளே! 
உன் மகள் என்னுடன் 
வாழ விரும்பவில்லையா.
பாசமாய் தாலாட்டி 
நேசமாய் பாலுட்டி
ஆசையில் முத்தமிடும்நாட்களை 
இழந்துவிட்டேன் என 
ஏங்கி தவிக்கிறேன் தாயே!

தொட்டிலிலே தாலாட்டி
புன்னகை பூத்த போது
சர்கரை ஊட்டி
பேருவைக்க மறந்தவளே 
உன் மகள்
குப்பைத் தொட்டியில்    
கதறி அழுதபோது 
எச்சிலையால் ஆசிர்வதிக்கப்பட்டு 
"அனாதை" பெயர் சுட்டப்பட்டேனே 
இதற்காகத்தான் பிறந்தேனோ!

என் போல் சிறுமி 
என்னை கண்டு பயத்தில் 
ஒருவளை கட்டிபிடித்தாளே
அர்த்தம் தேடி அலைகிறேன்
"அம்மா"
"அப்பா"  
"தங்கை"
"அண்ணன்"
என்ற வார்த்தைகளுக்கு.

பால்குடி மறக்கும் 
பருவத்திலே 
தாய் மடிப்பாலை 
குடிக்க ஏங்கினேன் 
தாய் பாசம் காண!

கதிரவன் மறைந்து 
சந்திரன் வருகையில் 
"தந்தயின்" கைபிடித்து 
வீதி சுற்ற விதி அமையவில்லையே 
தந்தைக்காக!

என் முகச்ஜாடைல்
பிறந்தவளை 
ஆசையாய் தூக்கி 
கொஞ்சிடகூடலையே வாழ்கை 
தங்கைக்காக!

என்ன தோழமை கண்டபோதும் 
உள்ளதை ஆசையாய் சொல்லி 
ஆனந்தம் காண 
அண்ணன் ஒருவன் 
கிடைக்கவில்லையே!

செல்லமாய் "ராசாத்தி"
"பொன்னுமணி ரத்தினமே"
வாழ்த்திட தாத்தா பாட்டி 
பிறக்கவில்லையே!

கனவில் விடலையை கண்டு
நானத்தில் "பருவம்"
வந்த பின்னர் 
மஞ்சள் வளைவிக்கும்
கலர் கலர் ரிப்பங்களுக்கும் 
ஏங்கிய நிமிடத்தில் 
ஆடையின்றி சிறு குழந்தையாய் நான் நிற்க
மானம் மறைக்க விடுகரை ஒதுங்க 
பலபேறு கண்ணுக்கு "வேசை"யாக 
நான் பட்டேனே.
தேவதையாக சித்தரிக்கப்பட வேண்டியவள்
நான்கு சுவர் அறைக்குள் 
மீசைகளுக்கு சிற்பமாய் போன 
கதையை என்னவென்று சொல்ல!

என் வாழ்கையை 
சீரழித்து விட்டு 
உல்லாசம் கண்ட 

முறடன்களுக்காக 

தாயே......

புனித பிறப்பம்மா "பெண்மை"
தனிமையில் குப்பையில் 
எரிந்துபலியாக்கிவிடாதே!
"நான்" ஒருவளே போதும்
இம்மண்ணில் வாழ்கையை 
தொலைத்தவள் என்று!    

Tuesday, May 10, 2011

அன்பு தோழி!


ன்னையின் அரவணைப்பு
கிடைத்த எனக்கு மற்ற பெண்களின்
பழக்கம் இல்லை சிறு வயதிலிருந்து!
என்னுடன் பிறந்தவர்கள்
அண்ணன்மார்கள் மட்டுமே
அக்காளின் பாசம் காண
ஏங்கி தவித்தேன்
பசுவின் மடிப்பாலை
குடிக்க ஏங்கும் கன்று  போல.
எப்பெண்ணைப் பார்த்தாலும்
மனதில் ஏக்கம் 
அக்காள் என்று.

அவ்வாறான எனக்கு
முதலில் கிடைத்த ஒரு
பெண்ணின் பாசம்
"தோழி" என்ற பெயரில்.
என் வாழ்வில் இரண்டவது
பெண் இவள்!
என் அன்னையை போன்று
என்னை அரவனைத்தாள்
அவள் பாசத்தில் மூழ்கிவிட்டேன்
டைடானிக் கப்பலைப்போலவே.


தேனாகத் தித்திக்கும்
என் மகிழ்ச்சியில் ஒரு
தோழியாக பங்கேற்றாள்.
கண்களில் கண்ணீர்
மணிகள் கண்டபோது
அன்னையாகவும் ஒருவேடுத்தாள்.
நான் சிரிக்க
என் கஷ்டங்களை சுமந்தவள்
என்னை சிரிக்க வைக்கின்றாள்.


இவளுக்கும் எனக்கும்
என்ன பந்தம்!
பூர்விகக்கால நன்றி கடனோ!
இல்லை,
எதிர்கால துணையோ
எதுவாகவும் இருக்கட்டும்
அவளுக்கென்று வாழ்வேன்.
"தோழன்" என்ற பெயரை
மட்டும் கொண்டு
அவள் அருகில் இருந்து
மனம்  வீசிக்கொண்டிருப்பேன்!
என் அன்பு தோழியே
உன்னை சுமப்பதிலும்
சுகமாகக்கொள்ளுவேன்!

Sunday, May 8, 2011

வீர வாக்கியம்



ரணத்தை மட்டும் அனுபவித்த 
என் இதையம் 
துடிக்கிறது எதையோ சொல்ல
காதுள்ள மனிதர்களே 
என் வார்த்தைகளுக்காக அல்ல 
என் உண்ணர்ச்சிகளுகவது 
சற்று செவிசாயுங்கள். 

ஏனோ தெரியவில்லை என் வார்த்தைகள் 
தடுமரிகின்றன. 
செவி சாய்த்தவர்களே கண்களை என் 
பக்கம் திருப்புங்கள் 
நான் சொல்ல நினைத்தவை 
வார்த்தைகளாக மாறி 
என் பேனாவிற்கு பழியாயின 
வார்த்தைகளை கிழித்தெறிந்தேன். 
வரிகளை மாற்றி வைத்தேன்

சாதாரண வாக்கியத்தை  
உணர்ச்சிவசமாக்கினேன் 
"வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் 
வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்"
 என்று. 

இதைத்தான் நான் சொல்ல நினைத்தது 
இதை இரு வரிகளாக பார்பவர்களுக்கு 
கிறுக்கல்களாகவே தெரியும், 
இருவரியில் வாழ்க்கை என்று பார்பவர்களுக்கு 
சிற்பமாக தெரியும். 

இந்த வரியை உணரமுடியாதவர்களுக்கு 
ஓர் அறிவுரை, 
"உன்னை நீ உணரு" 
பின் என் வரிகள் 
தானாக உணருவாய். 

ஆறறிவு படைத்த மனிதா 
வாழ்க்கயை உன் கையில் 
வைத்துக்கொண்டே 
வாழ்க்கயை வாழ முடியவில்லை 
என்று பறக்க நினைக்கிறாயே! 
உன் அறியாமையை 
தற்போதாவது உணரு. 

இன்னும் என்ன யோசனை 
உன்னை ஒரு நிலைக்கு 
கொண்டுசெல்ல துணை வேண்டுமா! 
கவலை வேண்டாம் 
"நான் இருக்கிறேன்" 
உனக்காக! தோழன் என்று! 

உன்னக்கேன்ற பாதையை 
நீ தேர்ந்தெடுத்து 
அதில் பயணிக்க 
ஆரம்பித்து விடு. 
தடைகள் வந்தால் தண்டிச்செல் 
கவலைகள் வந்தால் ஒடைத்துச்செல். 

வெற்றியை கண்டு 
மகிழ்ச்சி கொள்ளாதே! 
அடுத்த நொடி உன் வெற்றி 
தோல்வி என்ற பதிலாக 
மாறலாம்! 


சற்றும் துவண்டுவிடாதே 
மனதில் ஆணி அடித்தார்போல 
பதித்துவிடு இவ்வாகியத்தை 

"வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் 
வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்".

அம்மா




















என்னை புரிந்துக்கொள்ள 
யாருமில்லை இவ்வுலகில்.
என்னை புரிந்துக்கொண்டவர் 
எவரும் என்னிடம் இல்லை.
என்னை புரிந்துக்கொள்ள 
மீண்டும் ஒருவர் 
பிறக்கப்போவதும் இல்லை
உங்களைத்தவிர!

இவ்வுலகை காண  
எண்ணியவள்.
என் மழலை பேச்சை இரசித்தவள்.
காலில் சிறு புண் கண்ட போது
உங்கள் கண்களில் கண்ட 
சிறு துளி கண்ணீரால் 
அர்த்தங்கள் பல கண்டேன்!
"அம்மா"