வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, November 24, 2012

மறுசுழற்சி

உலகம்  வெப்பமயமாதலில் கருகி வருகிறது
புல் பூண்டு வளர்க்க இடம் இல்லாமல்
கூரைகளில் மணல் பரப்பி சுந்தரவனமாகும்
கட்டிடங்கள் மரக்கூழ் செய்ய
மரங்கள் இல்லாமல் காகிதங்களே
காகிதமாகிய கதையில் கசங்கி போன
என் காதல் கடிதம் போல் மறுசுழற்சிபடுமோ காதல்.    

Monday, October 1, 2012

நித்திரை கலயுதடி


நித்திரை கலயுதடி

மார்கழி மாத இரவில்
சித்திரமாக உன்முகம்
என் கனவில் வர
நித்தம் நித்தம் வீ பூக்கும்  
நிரந்திரமாக என்னுயிர் வாங்கும்
சூத்திரம் ஏதும் உண்டோ
என்னை சுண்டி இழுக்கும் பெண்ணே
தத்தை மொழிபேசி என் ஜீவன்
சினுங்கவைத்து கருந்கூத்தல்
வாடையில் மயக்கி என்னை
விவாகம் முடித்து ஒருமாத
காலம் ஆனா பின்னும்
தனிமையில் உறங்கும் போது
நித்திரை கலயுதடி

Thursday, July 26, 2012

எழுத்து


முன்னொரு நாளில் 
எதை எதையோ நினைத்து   
கவிதை எழுதிள்ளேன் 
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன் 
அதன் பொருள் அகப்பட்டதில்லை 
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை 
அழகான இயற்கை தேசத்தில் 
பாலைவனம் படர்ந்தது போல் 
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது 
சொல்வதற்கும் அழகான சொல் 
எழுதுவதற்கும் அழகான வார்த்தை 
அது  இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும் 
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை 
ஒற்றுமைபடுத்தும் 
எழுத்து.   

Wednesday, July 25, 2012

ஓர் உணர்வு

தாயின் மடியில் தவழ்ந்தோம் 
தகப்பன் சொல்லில் வளர்ந்தோம் 
அண்ணன் தங்கை பாசத்தில் மூழ்கினோம் 
சந்தர்ப்பம் நம்மை ஒன்றினைத்தது
வரையறுக்கப்படாத உறவுகளால் தோழ்சாய்ந்தோம் 
மற்றார் கேட்டால் தோழன் தோழி என்றோம் 
கதைகள் பேசினோம்  தோழ்சாய்ந்தோம் 
கண்ணீர் துடைத்தோம் நமக்குள்  இருக்கும் உறவு 
என்னவென்று யோசித்தேன் ஆராய்ந்தேன் பின்
உணர்ந்தேன் உன்னிடம் காதல் என்றேன் 
ஏலனமாய் பார்த்தாய் நான் சொல்லியதில் என்ன பிழை 
காதல் கண்களால் காண வேண்டிய பொருளன்று 
மனதளவில் உணர  வேண்டிய ஓர்  உணர்வு.    
 
  

Sunday, May 6, 2012

அவள் கவிதை...!

காரணம்…
என்ன சொல்ல?
எதைச்சொல்ல?
நடந்ததை நடந்தபடியேச் சொல்லவா?
இல்லை மாற்றிச்சொல்லவா?
சொல்வதென்று முடிவாகிவிட்டது
உண்மையைச் சொல்லுகிறேன்.

அவள் இறந்து போய்விட்டாள்!
அவள் இறந்து விட்டாள் என்பதை
என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது
என் உணர்வுகள் மட்டும் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

அவள் அழகாய் கவிதை எழுதுவாள்
எழுதிய கவிதையை பார்த்து புன்னகைப் பூப்பாள்
நானும் அவள் புன்னகையில் மயங்கிபோனேன்.
பின் காதலும் கொண்டேன்.

அவள் இறந்த பின் என்னால் வாழ முடியவில்லை
சாக துணிந்தேன்.......
சற்று யோசித்தேன்.....
நான் இறந்து போனால் என் கவலை தீரும்
என்னை சுற்றியவர்கள் கவலை என்ன ஆகும்?

அவள் இறந்து போய்விட்டாள் என்பது விதியாகிவிட்டது
நான் வாழ வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது.
நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்......!

(இக்கவிதையில் "நான்" என்பது யாரை குறிக்கிறது??
பதில்கள் எதிர்பார்க்கப் படுகிறது)

Sunday, April 29, 2012

நாங்கள் அகலிகையே!!!


வித விதமாக வர்ணங்கள் உண்டு 
அந்த வர்ணங்களுக்கும் ஓர் குணம் உண்டு 
நம் மூவண்ணக்கொடியின் மேல் வண்ணம் 
எங்களின் நிறமே!
புதிது புதிதாக தொழில் நுட்பங்கள் முளைக்க்கின்றன 
புதிது புதிதாக மாற்றங்களும் நிகழ்கின்றன 
ஆனால் எங்களுக்கென்று புதியதாக எந்த நிகழ்வும் 
முளைப்பதில்லை, நிகழ்வதும் இல்லை.
தொப்புள் கொடி உறவாகத் தொடரும்
எங்களின் "வறுமை" மட்டுமே 
புது புது காரணங்களினால் புதிது புதிதாக முளைகின்றன.

அறிவியலாம்,
முழு அக எதிரொளிப்பு விதியால் 
கானல் நீர் தோன்றுகிறது
என்ன விதியென்று எங்களுக்கும் தெரியவில்லை 
எங்களின் வறுமைக்கு!

கல்லுடைக்கும் போதும் 
பொதி சுமக்கும் போதும் 
எங்களின் கனவுகள் வியர்வையாக சிந்தும்
எங்களின் எதிர்காலம் என்ன தெரியுமா?
எங்களின் கனவு என்ன தெரியுமா?
அழகான "கேள்விக்குறி"
நாங்கள் விரும்புவது என்ன தெரியுமா?
எங்களுக்கென்ற "புதுமை" விடியலையே.
புதுமை அழகான சொல்
ஆற்றலை மிஞ்சும் சக்தி
பழமைகளை அழித்திடாமல் பல மாற்றம் செய்யும் புதுமை
எங்களை போன்றவர்களுக்கு காணக்கிடைக்கா உலகதிசையமே!
அதை எங்கள் கண்முன்னே கொண்டு வரப்போகும் மானிடன் யாரோ?
அது வரையில் நாங்கள் அகலிகையே!!!

Tuesday, March 27, 2012

அவள் பெயர் ராஜலெட்சுமி

என்னை எழுதத்துண்டிய முதல்  எழுத்து.
என்னை கவிஞன்னாக்கிய முதல் கவிதை.
என்னை வருடிச்சென்ற முதல் காற்று.
என்னை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த அழகு. 
என்னை ரவிவர்மனாக்கிய முதல் ஓவியம். 
எனக்குள் இருக்கும் என்னுருவம் காட்டிய கண்ணாடி. 
நட்பாற்ற வேண்டுமென்று துடித்த முதல் தோழி.
என் புனைப்பெயரின் முதல் எழுத்து அவள் பெயர். 
என்னை மருகவைத்த அவள் புன்னகை.
ரசிக்கத்துண்டிய அவள் பேச்சு.
உணர்ச்சி பட வைக்கும் அவள் தைரியம். 
பக்குவப்பட வைக்கும் அவள் உணர்வுகள்.
என்னை ஒவ்வொரு நாளும் ஏங்க வைத்து,
வாழ வேண்டுமென்று வழிகாட்டிய முதல் காதல்.
முதல் முத்தத்தில் காதல் என்னவென்பதை உணர்த்தியவள். 
தொழ் சாய்ந்து அமர்ந்த போது அரவணைப்பின் உச்சம் காட்டியவள்.
கை கோர்த்து சென்றபோது மனைவி என்று உணர்வை காட்டியவள். 
அருகில் இல்லா நாளில் அவள் முகம் இரசிக்க,
அவளிடம் புகைப்படம் கேட்டேன்.
நிஜமாய் நானிருக்க புகைப்படம் எதற்கு என,
காதலின் உன்னத நிகழ்வை கண்முன் காட்டினாள்.
இன்று அவள் என்னுடன் இல்லையென்றாலும் 
என்றும் வாழ வேண்டுமென வாழவைக்கும் அவள் நினைவுகள்.
என் இதயத்தில் அழியா இடம் பெற்ற அவளின் பெயர்........
ராஜலெட்சுமி.