வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Sunday, April 29, 2012

நாங்கள் அகலிகையே!!!


வித விதமாக வர்ணங்கள் உண்டு 
அந்த வர்ணங்களுக்கும் ஓர் குணம் உண்டு 
நம் மூவண்ணக்கொடியின் மேல் வண்ணம் 
எங்களின் நிறமே!
புதிது புதிதாக தொழில் நுட்பங்கள் முளைக்க்கின்றன 
புதிது புதிதாக மாற்றங்களும் நிகழ்கின்றன 
ஆனால் எங்களுக்கென்று புதியதாக எந்த நிகழ்வும் 
முளைப்பதில்லை, நிகழ்வதும் இல்லை.
தொப்புள் கொடி உறவாகத் தொடரும்
எங்களின் "வறுமை" மட்டுமே 
புது புது காரணங்களினால் புதிது புதிதாக முளைகின்றன.

அறிவியலாம்,
முழு அக எதிரொளிப்பு விதியால் 
கானல் நீர் தோன்றுகிறது
என்ன விதியென்று எங்களுக்கும் தெரியவில்லை 
எங்களின் வறுமைக்கு!

கல்லுடைக்கும் போதும் 
பொதி சுமக்கும் போதும் 
எங்களின் கனவுகள் வியர்வையாக சிந்தும்
எங்களின் எதிர்காலம் என்ன தெரியுமா?
எங்களின் கனவு என்ன தெரியுமா?
அழகான "கேள்விக்குறி"
நாங்கள் விரும்புவது என்ன தெரியுமா?
எங்களுக்கென்ற "புதுமை" விடியலையே.
புதுமை அழகான சொல்
ஆற்றலை மிஞ்சும் சக்தி
பழமைகளை அழித்திடாமல் பல மாற்றம் செய்யும் புதுமை
எங்களை போன்றவர்களுக்கு காணக்கிடைக்கா உலகதிசையமே!
அதை எங்கள் கண்முன்னே கொண்டு வரப்போகும் மானிடன் யாரோ?
அது வரையில் நாங்கள் அகலிகையே!!!