வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, July 2, 2011

பத்தாம் நாள்!

முதல் முறை
வெட்கத்தில் தலைகுனிந்தேன்
அவனை கண்ட
முதல் நாள்!

கண்கள்,

நீரின்றி தவிக்கும்
மீன்கள் போல துடித்தது
அவன் கண்கள் காணாத
இரண்டாம் நாள்!

வெகு தூரம் ஓடிய

கால்கள் போல் துவண்டது இதையம்
காதல் வலியால்
மூன்றாம் நாள்!

உதடுகள் ,

ரோஜா இதழை போல் வாடியது
அவனுடன் பேச ஏங்கிய
நான்காம் நாள்!

மல்லிகை போல்

முகம் புன்னகையால் பூத்தது
அவன் பேசின "காதலால்"
ஐந்தாம் நாள்!

இரவு,

உறக்கம் பிடித்தது
அவனால் கண்ட கனவு
ஆறாம் நாள்!

தேகம் சிலிர்த்தது

அவனுடன் இருந்த
சில நிமிடம்
ஏழாம் நாள்!

உலகம் புதிதானது

அவன் உதடு தீண்டிய
என் உதடுகளால்
எட்டாம் நாள்!

வாழ்கையை வாழ்ந்த அர்த்தம்
புரியவில்லை
அவனுடன் ஓடிச்சென்ற
ஒன்பதாம் நாள்!

என் பெண்மையை

உணர்ந்தேன்
அவன் சுண்டு விரல் தீண்டி
என் தேகம் விற்ற
பத்தாம் நாள்!
அப்போதுதான் தெரிந்தது
அவனுக்குள் இருந்தது
வெறும் காமம் என்று!

No comments:

Post a Comment