வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Tuesday, May 10, 2011

அன்பு தோழி!


ன்னையின் அரவணைப்பு
கிடைத்த எனக்கு மற்ற பெண்களின்
பழக்கம் இல்லை சிறு வயதிலிருந்து!
என்னுடன் பிறந்தவர்கள்
அண்ணன்மார்கள் மட்டுமே
அக்காளின் பாசம் காண
ஏங்கி தவித்தேன்
பசுவின் மடிப்பாலை
குடிக்க ஏங்கும் கன்று  போல.
எப்பெண்ணைப் பார்த்தாலும்
மனதில் ஏக்கம் 
அக்காள் என்று.

அவ்வாறான எனக்கு
முதலில் கிடைத்த ஒரு
பெண்ணின் பாசம்
"தோழி" என்ற பெயரில்.
என் வாழ்வில் இரண்டவது
பெண் இவள்!
என் அன்னையை போன்று
என்னை அரவனைத்தாள்
அவள் பாசத்தில் மூழ்கிவிட்டேன்
டைடானிக் கப்பலைப்போலவே.


தேனாகத் தித்திக்கும்
என் மகிழ்ச்சியில் ஒரு
தோழியாக பங்கேற்றாள்.
கண்களில் கண்ணீர்
மணிகள் கண்டபோது
அன்னையாகவும் ஒருவேடுத்தாள்.
நான் சிரிக்க
என் கஷ்டங்களை சுமந்தவள்
என்னை சிரிக்க வைக்கின்றாள்.


இவளுக்கும் எனக்கும்
என்ன பந்தம்!
பூர்விகக்கால நன்றி கடனோ!
இல்லை,
எதிர்கால துணையோ
எதுவாகவும் இருக்கட்டும்
அவளுக்கென்று வாழ்வேன்.
"தோழன்" என்ற பெயரை
மட்டும் கொண்டு
அவள் அருகில் இருந்து
மனம்  வீசிக்கொண்டிருப்பேன்!
என் அன்பு தோழியே
உன்னை சுமப்பதிலும்
சுகமாகக்கொள்ளுவேன்!

2 comments:

  1. அருமை தோழமையே...

    காதலையும் நட்பையும் போட்டு குழப்பிக்கொள்ளாத நட்பு என்றும் வாழும் தோழா....

    உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்கள் திருப்பதி போல் நல்ல தோழன் கிடைத்ததற்கு...!!!

    http://dassdft.blogspot.com/2011/07/blog-post_18.html

    ReplyDelete
  2. நன்றி தோழரே தாஸ்

    ReplyDelete